தூக்கி எறியவும் முடியாமல் தூக்கி சுமக்கவும் முடியாமல் என்னில் பேரன்பொன்று நிலைக் கொண்டிருக்கிறது... அதை கொட்டித்தீர்க்கத் தான் நீ இப்போதில்லை... இருப்பினும், பேரன்பின் சுமையுடன், கனத்த இதயத்துடன், ஒவ்வொரு கணப்பொழுதையும் ஜென்மங்களாக கடந்து செல்கிறேனடா...!
என் கைவிரல் இடைவெளிகளை உன் விரல்கள் கைப்பற்றிக் கொண்டபோது..... என் மனசிலும் நீ இடம் பிடிப்பாய்.... என்றுதான் எந்தன்.... இல்லை உந்தன் மனசும் அடம் பிடிக்கும் என கண்டிப்பாக நம்புகிறேன்.....!!
தினம் ஒரு கனவு கான்கிறேன் என்னவனுடன் பல முறை, பல நிகழ்ச்சியில் வாழ்ந்துவிட்டேன் இனி வாழ்வதற்க்கு ஒன்று இல்லை கனவை நிஜமாக்கும் முயற்ச்சியில் மட்டும் நான்